இங்கிலாந்தில் இந்தியரை கொன்ற வழக்கு ; 12 வயது சிறுமி கைது
லண்டனில் வசித்து வந்த இந்திய வமசாவளி சேர்ந்த பீம் சென் கொலை வழக்கில் சந்தேக நபராக 12 வயது சிறுமி ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்து.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் பீம் சென் கோலி. இந்திய வம்சாவளியான இவர் கடந்த செப்டம்பர் மாதம் லெய்செஸ்டர் பூங்காவுக்கு தனது செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் கோலியால் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனிடம் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமியும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
எனவே தற்போது அந்த சிறுமியையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸார் கூறுகையில்,
"செப்டம்பரில் பீம் கோலி இறந்ததைத் தொடர்ந்து, மற்றொரு நபராக 12 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்ட காரணங்களுக்காக பெயரிட முடியாத சிறுமி மீது ஆணவக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.