13 மாணவிகளுக்கு நேர்ந்த கதி...பாடசாலை முதல்வருக்கு ஆயுள் தண்டனை
இந்தோனேசியாவில் 11 வயது முதல் 14 வயதுடைய 13 மாணவிகளிடம் பாடசலை முதல்வர் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் ஹாரி விரவன் தலைமையிலான முஸ்லிம் மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளி உள்ளது. 2016 முதல் 2021 வரை, அவர் 11 முதல் 14 வயது வரையிலான 13 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக ஒன்பது கர்ப்பிணி மாணவிகள் பிரசவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹெர்ரியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் உளவியல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, வழக்கு பற்றிய விவரங்களை பொலிஸார் மறைக்கவில்லை.
இந்நிலையில், ஹெர்ரி தன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டார். இறுதியாக, ஹெர்ரிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.17.50 லட்சம் வழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.