பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முகமந்த் மற்றும் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் எல்லை தாண்டி நுழைய முயன்றபோது ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பன்னு மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காவலர் ராஸ் அலி ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்த பொதுமக்களில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.