ஐரோப்பியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக 130 பேர் அதிரடி கைது
Europe
By Sundaresan
ஐரோப்பியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் 130 கடத்தல்காரர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
22 நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஐரோப்பா முழுவதும் பொலிசார் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 130 பேரை கைது செய்துள்ளதாக சர்வதேச பொலிஸ் ஏஜென்சியான யூரோபோல் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதன்படி 10 லட்சம் நபர்கள், 2 லட்சம் வாகனங்கள் கடல், தரை மற்றும் வான் எல்லைகளில் முக்கியமாக ஐரோப்பாவிற்கு செல்லப் பெரிதும் பயன்படுத்தப்படும் பாதைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இச்சோதனையில் ஆயிரக்கணக்கான சட்டம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US