காசாவில் உணவு பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயத்தில்14,000 குழந்தைகள்
காசாவில் மனிதாபிமான உதவிகள் போதிய அளவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் ஃபிளெட்சர் எச்சரித்துள்ளார்.
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது காசா மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்பொருட்கள் முறையாக அவர்களை வந்தடைவதில்லை எனவும், அவ்வாறு கிடைக்கும் உதவிகள் மூலம் காஸா மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காஸாவிலுள்ள தாய்மார்கள் ‘ தங்கள் குழந்தைகளை உணவளிக்க முடியாமல் தவிக்கிறார்கள் எனவும்,இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் எனவும் இந்த பேரழிவைத் தவிர்க்க, உடனடி மற்றும் அதிகளவிலான மனிதாபிமான உதவிகள் அவசியம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,காஸாவில் உள்ள பல மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி செயலிலந்து காணப்படுவதாக தெரிவித்த அவர் உணவு, மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.