பாலஸ்தீன அரசை மோல்ட்டாவும் அங்கீகரிக்கின்றது
கனடாவை தொடர்ந்து , பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக மோல்ட்டா அறிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் இடம்பெற்றுவரும் இரண்டுஅரசு தீர்வு குறித்த கூட்டத்தில் உரையாற்றுகையில் மோல்ட்டாவின் வெளிவிவகார அமைச்சின் நிரந்தர செயலாளர் கிறிஸ்டொபர் குட்டாஜர் இதனை தெரிவித்துள்ளார்.
பொறுப்புணர்வு எங்களிற்குள்ளது
பாலஸ்தீனியர்களிற்கான சுயநிர்ணய உரிமைக்கு மோல்ட்டா நீண்டகாலமாக ஆதரவை வெளியிட்டு வந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் , பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் இரண்டுஅரசுகள் என்பதை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்புணர்வு எங்களிற்குள்ளது என குறிப்பிட்;டுள்ளார்.
இந்த காரணத்திற்காக மோல்ட்டா அரசு எதிர்வரும் ஐக்கியநாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என கொள்கைரீதியில் தீர்மானம் எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்