கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயம்
கனடாவின் ஒன்டாரியோவின் பாரி நகரில் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மார்ஷல் தெரு மற்றும் தோர்ன்க்ரெஸ்ட் சாலை அருகே உள்ள ஒரு வீடொன்றில் வெடிப்பு மற்றும் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் வீடு முற்றிலும் தீக்கிரையானது எனவும் இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் உயிர்காப்பு மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை, விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.