கனடாவின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வாகக் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகல்நேரத்தில் வெப்பநிலை சுமார் 30 பாகை செல்சியஸுக்கு மேல் உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் ஒன்டாரியோ, கியூபெக், நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர் ஆகிய மாகாணங்களில் வெப்ப அலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான உயர் வெப்பநிலை காரணமாக, வெப்ப மயக்கம் (heat stroke) அல்லது வெப்ப சோர்வு (heat exhaustion) போன்ற வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரின் உடல்நலத்திற்கும் தீவிர வெப்பம் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த நிலைமைகளின் அறிகுறிகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.