14,000 ஊழியர்கள் பணி நீக்கம்; அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்த ஆண்டில் பெருமளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.
அமேசான் நிறுவனம்
இதன்படி 2025 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமேசான் நிறுவனத்தில் ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்க போகிறது.
பல்வேறு பெரிய நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன.
4000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதன் மூலம் அமேசான் நிறுவனம் ஒரு ஆண்டில் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.