பல மணிநேரங்களாக நீடித்த தாக்குதல்கள் ; 14 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் பல்வேறு நகரங்களில் ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு நடத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை (6) காலை உக்ரைன் தலைமை அரசு சட்டத்தரணி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் 117 பேர் படுகாயமடைந்ததாகவும் மேலும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவு வேளையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள் பல மணிநேரங்களாக நீடித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடங்கள், கட்டட வளாகங்களில் தீ பரவி சேதமடைந்துள்ளன.
மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கீவ் பிராந்தியத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் திமூர் த்காச்சென்கோ தெரிவித்தார்.