கனடாவில் மீன் பிடித்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
கனடாவில் தெற்கு ஒன்ராறியோவைச் சேர்ந்த நான்கு பேருக்கு டெமிஸ்காமிங் ஷோர்ஸ் அருகிலுள்ள ஏரி ஒன்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த பல குற்றங்களுக்காக மொத்தமாக 4,250 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மீன்பிடி விதிமுறைகள், பொதுக் காணிகள் சட்டம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பனி வாகனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இயற்கை வளங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி, பாதுகாப்பு அதிகாரிகள் லேடி எவ்லின் ஏரியில் ஸ்னோமொபைல் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு ஆடவர்களை இடைமறித்து சோதனையிட்டனர் என ஜூலை 3ஆம் திகதி வெளியிடப்பட்ட நீதிமன்ற அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனையின் போது, அதிகாரிகளால் 8 ட்ரௌட் மீன்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் நான்கு மீன்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பெரிதாக இருந்தன.
குறித்த குழுவிலிருந்த ஒருவரிடம் மீன்பிடி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதோடு, அவர் இரண்டு மீன்களைப் பிடித்து வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பனி வாகனங்களின் தடங்களைப் பின்பற்றிச் சென்ற அதிகாரிகள், மற்றொரு ஏரியின் பனிப் படலத்தில் குப்பைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மீன்களில் ஒன்றின் வால் துடுப்பின் ஒரு பாதி காணவில்லை என தெரிவித்துள்ளது.