நேபாளத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் குழந்தைகள் உள்பட 14 பேருக்கு நேர்ந்த கதி
நேபாளத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகினர்.
நேபாளத்தில் சன்குவாஷபா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று காலை மதி பகுதியிலிருந்து டமாக் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சத் கும்டி பகுதிக்கு அருகில் சென்ற போது விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செயின்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.