டொராண்டோவில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் படுகாயம்
கனடாவின் டொராண்டோவில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டொராண்டோவின் கிழக்கு மையப் பகுதியில் உள்ள மொஸ் பார்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் இடையே இடம்பெற்ற சண்டையில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொராண்டோ காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் அதிகாரிகள் காயமடைந்த ஒரு ஆணைக் கண்டதாகவும், அருகில் மற்றொரு ஆண் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர் பலத்த காயங்களுடன் டொராண்டோ மருத்துவக் குழுவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, இரு ஆண்களும் கத்தியால் குத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.