கனடாவில் 14 வயது சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு
கனடாவில் 14 வயதான சிறுவன் ஒருவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பதின்ம வயதுடைய சிறுவனை கத்தியால் குத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் குறித்த சிறுவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
தோரன்கிலிப் பார்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 வயதான சிறுவன் வருனை இந்த 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.