லண்டன் பேருந்தில் கத்தி தாக்குதலில் 14 வயதுச் சிறுவன் மரணம்
பிரிட்டனின் லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்தில் கத்தியால் குத்திக்கொன்ற 2 பதின்ம வயதுச் சிறுவர்கள் நேற்று முன் தினம் (15 ஜனவரி) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 15, 16 வயதுடையவர்கள் எனக் காவல்துறை கூறியது. இதற்குமுன் பல கத்திக்குத்துச் சம்பவங்கள் நடந்த வூல்விச் (Woolwich) பகுதியில் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்ததற்கு முன்தினம் 18 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திற்குச் சில கிலோ மீட்டர் தூரத்தில் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமுற்றதாக AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அதேவேளை கடந்த ஆண்டு (2024) லண்டனில் 10 பதின்ம வயதுச் சிறுவர்கள் கத்திக்குத்துத் தாக்குதல்களால் மாண்டனர்.
நீதித்துறை அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 2017ஆம் ஆண்டு, 10 முதல் 17 வயதுடைய 27,000 பதின்ம வயதுச் சிறுவர்கள் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்லது.