அமெரிக்காவை நடுநடுங்க வைத்த புயல் ; நொடியில் இருளில் மூழ்கிய நகரம்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் திடீரென வீசிய பயங்கர தூசிப் புயலால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கண்ணிமைக்கும் தோன்றிய அந்தப் புயல், நகரத்தையே உலுக்கி, மின் இணைப்புகளை துண்டித்ததுடன், விமானப் போக்குவரத்தையும் முடக்கியது.
பயங்கர நிகழ்வு
இந்த புயலை தொடர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அரிசோனாவில் சுமார் 39,000 பேர் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.
மேலும், அங்குள்ள ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியது.
புயல் காரணமாக அனைத்து விமானங்களும் தரையிறங்குவது மற்றும் புறப்படுவது நிறுத்தப்பட்டன. இதனால், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின, குறைந்தது 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பெரும் சுவர் போல வரும் இந்த புயல், பீனிக்ஸ் நகர கட்டிடங்களை மூடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பயங்கர நிகழ்வு, போனிக்ஸ் நகர மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.