கனடாவில் துப்பாக்கிச் சூடுடன் தொடர்புடைய 14 வயது சிறுவனைத் தேடும் பொலிஸார்
கனடாவின் டொரோண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
14 வயது சிறுவன் டான்ஃபோர்த் வீதி மற்றும் எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் அருகிலுள்ள ஒரு வீடிற்கு வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர்.
சம்பவத்தின் பின்னர் தாக:குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருவரும் தீவிர காயமடைந்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இளைஞர் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறுவர்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது. ஆனால் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் குறித்த சிறுவனின் பெயரும் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
அவரின் பெயர் வாலென்டினோ பெத்தல் எனும் இவர் மீது கொலை முயற்சி இரண்டு குற்றச்சாட்டுகள், கொலை நோக்கத்துடன் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆறு அடி ஒரு அங்குல உயரம், 150 பவுண்ட் எடை கொண்ட இவர் “ஆயுதம் ஏந்திய ஆபத்தான நபர்” என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவரின் இருப்பிடத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளவர்கள் 416-808-4300 என்ற எண்ணில் டொரோண்டோ பொலிசாரை அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றவியல் ரகசிய தகவல் மையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.