விளையாட்டால் 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பகீர் சம்பவம்
ஸ்காட்லாந்தின் லியோன் பிரவுன் (Leon Brown) என்ற 14 வயது சிறுவன் டிக்டாக்கின் பிளாக் அவுட் சேலஞ்ச்-விளையாட்டை ஏற்றுக்கொண்டு உயிரை இழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி லியோன் பிரவுன் என்ற சிறுவன் டிக்டாக்கின் ஆபத்தான ஆன்லைன் சவாலான ”பிளாக் அவுட் சேலஞ்ச்”(blackout challenge) விளையாட்டை முயற்சி செய்த போது அவரது அறையில் சுயநினைவை இழந்து கிடந்துள்ளார்.
சந்தேகமடைந்த அவரது தாயார் லாரின் கீட்டிங் (Lauryn Keating), லியோன் பிரவுனின் (Leon Brown) அறைக்கு சென்று அழைத்த போது, அவர் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து லியோன் பிரவுனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சோதித்த போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சவாலின் கீழ், குழந்தைகள் சமூக ஊடகங்களில் வீடியோக்களைப் பகிர்வதற்கு முன்னாதாக தங்களை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மயங்கி விழும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு படமெடுக்கிறார்களாம்.
இவ்வாறு பயமுறுத்தும் சவாலின் காரணமாக தனது மகன் இறந்துவிட்டான் என்பதை அறிந்த பிறகு, ஸ்காட்லாந்தின் டெய்லி ரெக்கார்டுக்கு தனது மகன் அவரது நண்பர் ஒருவருக்கு ஃபேஸ்டைமில் சவாலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் என கீட்டிங் (Lauryn Keating) தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக கீட்டிங் (Lauryn Keating) தெரிவித்துள்ள தகவலில், லியோனும் (Leon Brown), அவரது நண்பர்களும் இதனை ஒருவேளை நகைச்சுவை என்று நினைத்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
டிக்டாக்கில் பிளாக் அவுட் சவால் என்று தேடினால் அதில் வந்த வீடியோ முடிவுகள் மிகவும் ஆபத்தானவையாக வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
டிக்டாக் போன்ற ஆன்லைன் விளையாட்டால் பல இறப்புகளைத் தொடர்ந்து சில பெற்றோர்கள் வீடியோ பகிர்வு பயன்பாட்டின் மீது வழக்குத் தொடர்ந்ததுடன் தளத்தின் அல்காரிதம் பிளாக்அவுட் சவால் வீடியோக்களை ஊக்குவிக்கிறது என குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் டிக்டாக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அத்தகைய வீடியோகளை ரிப்போர்ட் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.
எனினும், நியூயார்க் போஸ்ட் படி, இந்த செயலி இன்னும் அபாயகரமான சவாலை சித்தரிக்கும் காட்சிகளுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.