இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளரின் வெறிச் செயல் ; வீதியில் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு
இங்கிலாந்தில் உள்ள நைட் கிளப் ஒன்றிலிருந்து வெளியே வந்த பெண்ணைத் பின்தொடர்ந்து, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கழுத்தை நெரித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு 37 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனைக்குப் பிறகு, புகலிடக் கோரிக்கையாளர் இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படுவார் என்றும் நீதி மன்றம் அறிவித்துள்ளது. ஃபவாஸ் அல்சமாவு (Fawaz Alsamaou) என்ற 33 வயது சிரிய அகதி குற்றத்தை செய்தவராவார்.

இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படுவார்
கார்டிஃப்பில் உள்ள ‘பல்ஸ்’ (Pulse) நைட் கிளப்பிலிருந்து வீட்டுக்குத் தனியாகச் சென்ற பெண்ணைத் இருண்ட தெருக்கள் வழியாகப் பின்தொடர்ந்தான். ரயில்வே பாலத்தின் அடியில் அந்தப் பெண் சென்றபோது, அவளை வழிமறித்துத் தாக்கி, பாலியல் தாக்குதலையும் நடத்தியுள்ளார்.
பெண் துணிச்சலாக அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டு தப்பித்து, உடனே போலீசுக்குத் தகவல் கொடுத்தார். இந்தக் குற்றத்தைச் செய்த அல்சமாவு, பாலியல் வன்புணர்வு மற்றும் வேண்டுமென்றே கழுத்தை நெரித்தல் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து புகலிடக் கோரிக்கையாளருக்கு 37 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில், நீதிபதி சீலியா ஹியூஸ் கூறுகையில், இரவில் தனியாக நடந்து செல்லும் ஒரு பெண், உங்களைப் போன்ற ஒரு வேட்டையாடும் மனிதனால் தாக்கப்பட உரிமையில்லை. இது கார்டிஃபில் இரவில் நடந்த ஒரு பயங்கரமான தாக்குதல், எனக் கடுமையாகக் கண்டித்தார்.
நீதிமன்றம் மேலும், சிறைத் தண்டனைக்குப் பிறகு, இந்த அரக்கன் இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படுவார் என்றும் அறிவித்துள்ளது.