அமெரிக்கா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ; 14 வயது மாணவன் கைது
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.
இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.