சீனாவில் ஏற்பட்ட அனர்த்தம்; 16 பேர் பரிதாப பலி!
சீனாவில் காஸ் சிலிண்டர் வெடிப்பால் உணவக கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 16 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியின் வுலோங் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் காஸ் கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து கட்டடம் இடிந்து விழுந்ததில் அதற்குள் 26 பேர் சிக்கிக்கொண்டனர். நேற்று நள்ளிரவு நிலவரப்படி, இடிபாடுகளுக்குள் சிக்கி பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்பு நடந்தபோது உணவகத்தில் பலர் மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


