பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு
பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிலிப்பைன்சின் படான் மாகாணத்தில் இருந்து இலோய்கா நகருக்கு டெர்ரா நோவா என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டதை தொடர்ந்து ராட்சத அலை ஒன்று கப்பலைத் தாக்கியுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் சேதமடைந்த கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பின்னர் அந்த கப்பலில் இருந்த 16 பணியாளர்களை மீட்டுள்ளதுடன் காணாமல் போனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு வர முயன்ற போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மூழ்கிய கப்பலில் இருந்து சுமார் 14 லட்சம் லிட்டர் எண்ணெய் கடலில் கலந்ததனால் அப்பகுதி எண்ணெய் படலமாக மிதக்கிறது.
கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.