கனடாவில், பஸ்ஸில் தகாத செயலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் கைது
கனடாவின் நயாகரா பகுதியில், பஸ் ஒன்றில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்முறை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், நயாகரா பால்ஸ் பகுதியில் மோரிசன் தெருவும் டோர்ச்செஸ்டர் சாலையும் சந்திக்கும் பகுதியில் பெண் ஒருவர் பஸ்ஸில் ஏறியுள்ளார்.
பயணத்தின்போது, அவரை அடையாளம் தெரியாத ஆண் ஒருவன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நயாகரா பிராந்திய போலீசார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
செயிண்ட் கேத்தரின்ஸில் உள்ள வெல்லண்ட் அவென்யூவிலும் ஜெனீவா வீதியிலும் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கினார்.
அதே நிலையிலேயே குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் இறங்கியதாகவும், வடமேற்கே ஓடிச் சென்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
அன்று மாலை போலீசார் குறித்த சிறுவனை கைது செய்து, அவருக்கு பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனின் வயது 18க்கு குறைவாக இருப்பதால், 'இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்' கீழ் அவரது அடையாளம் பாதுகாக்கப்படுகிறது.