AI மூலம் பிறந்த உலகின் முதல் குழந்தை ; மருத்துவ துறையில் புதிய சாதனை
செயற்கை நுண்ணறிவு தொழினுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை மெக்சிக்கோவில் பிறந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையமொன்றில் , AI மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின் மூலம் செலுத்தி வெற்றிகரமாக கருவுறச்செய்து, அந்த கருவுற்ற முட்டையை ஒரு 40 வயதான பெண்மணி ஒருவரின் கருப்பையினுள் பொருத்தி, குழந்தையை வளரச் செய்து கடந்த மார்ச் மாதம் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
AI- உதவியுடன் குழந்தை
இந்நிலையில் இந்த AI தொழில்நுட்பத்தால் கருத்தரிக்க இயலாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிக மிக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதேவேளை குறித்த சிகிச்சை முறை தொடர்பில் டாக்டர் சாவேஸ்-படியோலா கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு முட்டையையும் கருத்தரிக்க 9 நிமிடங்கள் 56 வினாடிகள் ஆனது.
இருப்பினும், எதிர்கால AI- உதவியுடன் குழந்தை பெறுதல் மிக வேகமாக இருக்கும்.
AI ஐப் பயன்படுத்தி விந்தணு தேர்வு உட்பட ICSI செயல்முறையின் ஒவ்வொரு படியையும் தானியக்கமாக்கும் முதல் அமைப்பு இந்த அமைப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளமையானது மருத்துவ உலகில் பெரும் திரும்புமுனையாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.