நைஜீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்ததில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது.
இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.