ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட சென்ற விடயம் ; பிரதமர் ஹரிணி வெளிப்படுத்திய தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பார்க்க சென்றதாக வெளியான தகவல் தவறானது என்றும், தான் சென்றதாக தகவல் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பில் வெளியான செய்தியின் அடிப்படையில் ஊடகங்களுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
இந்த செய்தியை முற்றிலும் மறுக்கின்றோம்
இலங்கையின் பிரதான ஊடகமொன்று இவ்வாறு செய்தி அறிக்கை செய்திருப்பது நகைப்புக்குரியது. மேலும் இந்த செய்தியை நாங்கள் முற்றிலும் மறுக்கின்றோம். மேலும் தவறான செய்தி வெளியிட்டுள்ளமையினால் குறித்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
ஊடகங்களுக்கு நான் ஒரு சில விடயங்களை கூற விரும்புகின்றேன் அதாவது, பொய்யான செய்திகளை உருவாக்குங்கள். நான் அவ்வளவு தான் சொல்வேன். நான் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட சென்றிருந்தால், அதற்கான சாட்சி உங்களிடம் இருக்கின்றதா? , சாட்சி இருக்குமானால் அதை முன்னிலைபடுத்துங்கள்.
சாட்சிகள் இன்றி ஏன் பொய்யான அறிக்கையை முன்வைக்கின்றீர்கள். நான் போயிருந்தால் உங்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது.
ஒரு பிரதமராக நான் இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது அல்லவா? அதேவேளை, இரகசியமான முறையிலும் எந்தவொரு இடத்துக்கும் சென்றுவிட முடியாது அல்லவா? எதுஎப்படியோ நீங்கள் நான்சென்றதற்கான சாட்சியை முன்வைத்தால் தான் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும்.” என தெரிவித்தார்.