கனடாவில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட 17 வயது சிறுவன்
சிறுவன் கனடாவில் 17 வயதான சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஈஸ்ட் யோர்க்கில் 34 வயது ஆண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதியம் 2:30 மணியளவில் வூட்பைன் அவென்யூ மற்றும் ஓ’கானர் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் டுவைட் லாங்கில் என்பவரைக் கண்ட பொலிஸார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிறிது நேரத்தில் இறந்தார்.
34 வயதான லாங்கில் மூன்று குழந்தைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு நகரின் 25-வது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமப்வத்துடன் தொடர்புடைய சிறுவன் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.