அடிக்கு மேல் அடி; இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய உத்தரவு
இளவரசர் ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் இரண்டாம் அவர்களின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ (வயது 65) மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது இளம் பருவத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டினார்.

வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவு
ஆனால் இந்த புகாரை இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வர்ஜீனியா ஜியூப்ரே திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
அரண்மனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, பட்டங்கள் மற்றும் கவுரவங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இப்போதிலிருந்து அவர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; அவர் மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்வார் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை பதவிகளை இழந்த ஆண்ட்ரூ, ஒரு காலத்தில் துணிச்சலான கடற்படை அதிகாரியாக பணியாற்றியவர்.
அதோடு 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அர்ஜென்டினாவுடன் நடந்த பால்க்லாந்து போரின் போது ராணுவத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.