பிரிட்டிஷ் கொலம்பியாவில் மலையேறிய போது பரிதாபமாக பலியான 17வயது சிறுவன்
கனடாவின், பிரிடிஷ் கொலம்பியாவின் உள்ளகப்பகுதியில் உள்ள பாஸ்டியன் மலைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மலையேறும் போது ஏற்பட்ட விபத்தினால் குறித்த சிறுவன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கள் பிற்பகலில், மூன்று இளைஞர்கள் சால்மன் ஆர்ம்க்கு வடக்கே உள்ள பாஸ்டியன் மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் 200 அடி உயரமுள்ள பாறையின் உச்சிக்கு அருகில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த மூவரில் ஒருவரின் தந்தை, பாறையின் அடியில் உணர்வின்றி இருந்த சிறுவனை கண்டுள்ளார். தேடுதல் மற்றும் மீட்பு குழு, சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தியுள்ளனர்.
“இது நம் சமுதாயத்தை ஆழமாக பாதிக்கும் இன்னொரு சோகமான சம்பவம்” என பொலிஸ் அதிகாரி ஸ்டாஃப் சார்ஜென்ட் சைமன் ஸ்காட் தெரிவித்தார்.
“இளமை வயதில் ஒரு உயிரின் இழப்பு மிகுந்த துயரமளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பம், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பிரிடிஷ் கொலம்பியா மரண விசாரணை சேவை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.