ஒன்றாரியோவில் குடும்ப மருத்துவர்களை இழந்து வரும் மக்கள்!
ஒன்றாரியோவில் பலர் குடும்ப மருத்துவர்களை இழந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆறு மாத காலத்தில் சுமார் 170,000 பேர் குடும்ப மருத்துவர்களை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட முதல் ஆறு மாதங்களில் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலானவர்கள் குடும்ப மருத்துவர்களை இழக்க நேரிட்டுள்ளது.
குடும்ப மருத்துவர்கள் சேவை வழங்குவதனை குறைத்துக் கொண்டு வருவதாக கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஓய்வு பெறும் வயதில் உள்ள மருத்துவர்கள் தொடர்ந்தும் சேவையாற்ற விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப மருத்துவர்களை இழப்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள முடியாமை நீண்ட கால அடிப்படையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தெளிவாக ஆராயப்பட வேண்டிய அவசியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.