அமெரிக்க NFL வீரர் Marshawn Kneeland இன் சோக முடிவு
அமெரிக்க தேசிய கால்பந்து லீக் (NFL) அணியான டல்லாஸ் கௌபாய்ஸ் (Dallas Cowboys) அணியின் இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய தற்காப்பு வீரர் (Defensive End) மார்ஷான் நீலாண்ட் (Marshawn Kneeland), தனது 24-வது வயதில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் மார்ஷான் நீலாண்ட் (Marshawn Kneeland), தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்க விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை
பொலிஸாரின் அறிக்கையின்படி, நீலாண்ட் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தற்கொலை (Self-Inflicted Gunshot) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலாண்ட் (Marshawn Kneeland), கௌபாய்ஸ் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டவர். குறுகிய காலத்திலேயே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இளம் வயதில், விளையாட்டு உலகின் உச்சத்தில் இருந்த ஒரு வீரர் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவரது மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கௌபாய்ஸ் அணி நிர்வாகம் மற்றும் என்.எஃப்.எல். வீரர்கள் நீலாண்டின் (Marshawn Kneeland), திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.