ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணையும் கஜகஸ்தான் ; டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்காக கசகஸ்தான் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் இணையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கசகஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கசகஸ்தானும் இஸ்ரேலும் 1992 முதல் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தாலும், இந்த நடவடிக்கை ஆபிரகாம் ஒப்பந்தங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு அடையாளச் செயலாகக் கருதப்படுகிறது.
இது பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.