பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோ அழகி அவமதிப்பு
2025-ம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி வருகிற 21-ந்தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு அழகிகள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து உள்ளனர்.
அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதில் மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் பேசிய போது, போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மெக்சிகோ அழகி பாத்திமா போஷை கூப் பிட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டார். அப்போது பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது அவரை முட்டாள் என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கூறினார்.