றொரன்டோவைச் சேர்ந்த18 நண்பர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
கனடாவின் றொரன்டோவில் 18 நண்பர்கள் கூட்டாக இணைந்து கொள்வனவு செய்த லொத்தர் சீட்டு ஒன்றுக்கு 2.7 மில்லியன் டொலர் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. லொட்டாரியோ லொத்தர் சீட்டு பரிசிலுப்பில் இந்த நண்பர்கள் பரிசு வென்றுள்ளனர். பரிசு வென்ற நண்பர்கள் குழுவின் பெயர் விபரங்கள் வருமாறு
• Lee Donald of Markham, Ont.
• Arudchelvan Arampamoorthy of Scarborough, Ont.
• Carlton Morris of Scarborough, Ont
. • Dervin Vassell of Oshawa, Ont.
• Felix Iyoha of Toronto, Ont
• Garfield Lowe of North York, Ont
• Ibraham Baiyat of Scarborough, Ont
• Joseph Pereira of Toronto, Ont.
• Joseph Rasaiya of Scarborough, Ont
• Kanalingam Shanmugam of Scarborough, Ont
• Kurtis Charles of Scarborough, Ont.
• Mitra Bissoon of Scarborough, Ont.
• Mohammad Damra of Scarborough, Ont.
• Ndukate Ntete of Oshawa, Ont.
• Raphael George of Pickering, Ont.
• Scott McConnell of Oshawa, Ont.
• Shahram Dehghanpoor of Pickering, Ont.
• Winston Jennings of Ajax, Ont.
இந்தக் குழுவின் தலைவராக லீ டொனால்ட் என்பவர் பெயரிடப்பட்டுள்ளார். இந்த நண்பர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூட்டாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் பங்குபற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றி இலக்கங்களை பரிசீட்த்த போது தனது அலைபேசியில் ஏதோ கோளாறு எனக் கருதியதாக டொனால்ட் தெரிவிக்கின்றார்.
பின்னர் மீண்டும் பரிசோதித்த போது தமது லொத்தர் சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளமையை தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பரிசுத் தொகையை சரி சமமாக பிரித்தால் ஒவ்வொருவரும் தலா 150,000 டொலர்களுக்கு மேல் பெற்றுக்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் அந்தப் பணத்தை முதலீடு செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை சிலர் தங்களது கடன்களை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.