18 மணித்தியாலம் தொடர்ந்து வேலை... பைக்கிலேயே உயிரிழந்த உணவு டெலிவரி நபர்!
சீனாவில் 18 மணித்தியாலங்கள் தொடர்ந்து உணவு டெலிவரி வேலை பார்த்துவிட்டு களைப்பில் பைக்கிலேயே உறங்கியபோது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பைக்கிலேயே அவர் சடலமாக கிடந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த சோக சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் இம் மாத தொடக்கத்தில் கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்ஷோவில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 55 வயதான யுவான் என்ற நபரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவான் இடைவிடாமல் செய்த வேலைக்காரணமாக ஒரு நற்பெயரை பெற்றுள்ளார். இவரை "ஆர்டர் கிங்" என்று அன்பாக அழைப்பார்கள்.
யுவானின் மறைவு தொடர்பில் அறிந்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், 'ஆர்டர் கிங்' விழுந்துவிட்டார். உண்மையில் இந்த அவலங்களைத் தவிர்க்க வழி இல்லையா?" என பதிவிட்டுள்ளார்.