அல்-அக்ஸா பள்ளிவாசல் அத்துமீறலுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் கடும் கண்டனம்
இஸ்ரேலின் வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) தலைமையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யூதர்களின் 'சுக்கோத்' (Sukkot) பண்டிகையின் 3ஆவது நாளில், இடமர் பென்-க்விர் தலைமையில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

இந்தச் சம்பவத்தை "தூண்டுதல் நடவடிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்" என ஐக்கிய அரபு இராச்சியம் வர்ணித்துள்ளது.
இதேவேளை, இடமர் பென்-க்விர் ஹெப்ரோனில் உள்ள இப்ராஹிமி பள்ளிவாசலிலும் குடியேற்றவாசிகளுடன் இணைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்-அக்ஸா வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர், "அல்-அக்ஸாவிலும் சிறைச்சாலைகளிலும் நாங்களே உரிமையாளர்கள்; பயங்கரவாதக் கைதிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.