அமெரிக்காவில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் பலி
அமெரிக்காவுக்கு, மெக்சிகோ நாட்டு வழியாக பலர் அகதிகளாக செல்ல முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு மெக்சிகோவில் ஒரு பஸ்சில் வெனிசுலா, ஹைதி ஆகிய நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அகதிகள், அமெரிக்காவுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்சாக்கா நெடுஞ்சாலையில் அப் பேருந்து விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்துள்ளனர். அத்தோடு அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது.
அந்த வாகனங்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.