காசா மக்களை வெளியேறுமாறு கூறிய இஸ்ரேலிய இராணுவம்
ஹமாஸிற்கு எதிரான தீவிரமான தாக்குதலுக்கு முன்னதாக, காசா நகரத்தில் உள்ள பொதுமக்களை கான் யூனிஸுக்கு தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.
அல்-மவாசியில் ஒரு நியமிக்கப்பட்ட "மனிதாபிமான மண்டலம்" அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு இஸ்ரேல் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கள மருத்துவமனைகள், தண்ணீர் விநியோகம், உப்புநீக்கும் அலகுகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்குவதாகக் கூறுகிறது.
ஹமாஸின் மையத் தளமாக, இஸ்ரேல் கருதும் காசா நகரத்திற்குள் ஆழமாகச் செல்ல இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படைகளை இயக்கியுள்ளார்.
இப்போது காசா பகுதியில் சில பகுதியைகளையும் நகரத்தின் சில பகுதிகளையும் கட்டுப்படுத்துவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கப்படுகிறது.