ஜெர்மனியில் பொலிஸாருக்கு ஆட்டங்காட்டிய 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
ஜெர்மனி ஹனோவர் நகரத்தில் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஜெர்மனியின் ஹனோவர் பிரதேசத்தின் வீதியில் சென்று கொண்டு இருந்த வாகனத்தை பொலிஸார் சோதணையிட முயற்சித்துள்ளனர்.
அப்போது 19 வயதுடைய இளைஞர் ஒருவர் வாகனத்தை கொண்டு தப்பியோட முயற்சித்துள்ளார். இதன் காரணத்தினால் பொலிஸார் வாகனத்தை துரத்திய நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் 19 வயது இளைஞர் மீது சரமரியான துப்பாகி பிரயோகம் இடம் பெற்றதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞர் படுங்காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த இளைஞன் தப்பியோடுவதற்கு பின்னணியில் மிகப்பெரிய மோசடி அல்லது குற்றச்செயல்கள் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் குறித்த இளைஞனை பேச வைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.