பிரான்ஸில் 197,000 பேர் ஆர்ப்பாட்டம்; 500 இற்கும் அதிகமானோர் கைது
பிரான்ஸில் அனைத்தையும் முடக்குவோம் ("Bloquons tout!") எனும் கோஷத்தோடு வேலை நிறுத்தத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர், நாட்டின் பல இடங்களில் 200 வரையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
197,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகர் பரிஸ் உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின.
பொதுச் சொத்துக்களை நாசமாக்கி ஆர்ப்பாட்டங்கள்
குப்பைத்தொட்டிகளை தீ வைத்தும், டயர்களை வீதியில் போட்டு கொளுத்தியும், பொதுச் சொத்துக்களை நாசமாக்கியும் ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 540 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 211 பேர் தலைநகர் பரிசில் கைதாகியுள்ளனர். 415 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையில் பொலிஸார் தரப்பில் 23 காயமடைந்துள்ளனர். 880 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.