கனடாவின் காட்டுத்தீ தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ; 82000 பேர் பலி
கனடாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களினால் மொத்தமாக 82100 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்டுத்தீ காரணமாக நேரடியாக 5400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மறைமக காரணிகளினால் உலக அளவில் 82100 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
காட்டுத்தீ காரணமாக ஏற்படக்கூடிய புகையினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படும் பகுதிகளில் புகையை சுவாசிக்க நேரிடும் நபர்களுக்கு ஆபத்து அதிகம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனால் ஏற்படக்கூடிய உடல் ஆரோக்கிய கேடுகள் அதிகம் எனவும் இவ்வாறான காட்டுத்தீகளினால் காலநிலை மாற்ற அனர்த்தங்கள் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் காட்டு தீ காரணமாக வட அமெரிக்கா, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7ம் திகதி வரையில் கனடாவில் நிலவிய கடுமையான காட்டு தீ காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவில் சுமார் 5400 பேர் உயிரிழந்தனர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.