கனடாவில் 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகன திருட்டு தொடர்பில் இருவர் கைது
கனடாவின் கியூபெக் மாகாண காவல்துறை தகவலின்படி, மொன்றியல் பகுதியில் 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்களை திருடிய சம்பவத்தில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுளள்னர்.
40 மற்றும் 59 வயதான சந்தேகநபர்கள் செப்டம்பர் 19 அன்று ஜொலியட் நீதிமன்றத்தில் தாமாகவே முன்னிலையாகியுள்ளனர்.
பின்னர் இந்த சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கைது, 2024 டிசம்பரில் தொடங்கிய விசாரணையுடன் தொடர்புடையது.
அப்போது காவல்துறை நடத்திய சோதனையில் எஸ்.யு.வீகள், டிராக்டர், ஸ்னோமொபைல்கள், டிரெய்லர்கள் உள்ளிட்ட 1 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன.
மேலும், செப்டம்பர் 25 நடைபெற்ற மற்றொரு சோதனையில் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்ததால், மீட்கப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு 1.8 மில்லியன் டொலராக உயர்ந்தது.
சந்தேகநபர்களுக்கு குற்றம் மூலம் கிடைத்த சொத்தை வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.