ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட 2 கனடியர்கள் கைது
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இரண்டு கனையடியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 மாதங்களாக கிழக்கு ஒன்றாறியோவில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
பிரம்டனை சேர்ந்த 45 வயதான ஒருவரும் நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த 33 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமார் 36 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் ஆக்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ முதல் கிங்ஸ்டன் வரையிலும், ஒட்டாவா, பீல், ரொறன்ரோ, வின்சோர் மற்றும் யோக் உள்ளிட்ட சுமார் 20 பொலிஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் காரணமாக சந்தேக நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        