அவுஸ்திரேலியாவுக்கான விசா கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

Australia World
By Sahana Jul 02, 2026 09:58 AM GMT
Report

அவுஸ்திரேலிய அரசாங்கம் பெரும்பாலான விசா பிரிவுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை நேற்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த விசா கட்டண உயர்வால் சர்வதேச மாணவர்கள், தற்காலிக பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் குடும்பமாக குடியேறுவதற்காக விசாக்களுக்கு விண்ணப்பிப்போர் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் புதிய நிதியாண்டின் (2026–2027) ஆரம்பத்துடன் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கான விசா கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு | Visa Fees For Australia Increase Dramatically

இதற்கமைய, மாணவர் விசா விண்ணப்பக் கட்டணம் 2,500 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்காலிக பட்டப்படிப்பு விசா கட்டணம் 5,750 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவில் வசிப்போரின் பங்காளிகள் மற்றும் பெற்றோருக்கான விசா விண்ணப்பக் கட்டணங்கள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திறன்சார் குடியேற்றம் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு விசா பிரிவுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தக் கட்டண உயர்வு அவுஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் சர்வதேச மாணவர்கள் மற்றும் குடும்பங்களையே மிக மோசமாகப் பாதிக்கும் என குடிவரவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவுஸ்திரேலியாவுக்கான பல்வேறு விசா வழிகள் தொடர்ந்தும் திறந்தே காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திறன்சார் தொழிலாளர்களின் தேவை, வீட்டுவசதி நெருக்கடி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலியா தனது குடிவரவு விதிகளை மறுபரிசீலனை செய்து வரும் நிலையிலேயே இந்த விசா கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அண்மைக்கால கட்டண விபரங்கள் மற்றும் தகைமைகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US