கனடாவில் 5 கிலோ போதைப்பொருள் மீட்பு
கனடாவில் சுமார் ஐந்து கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதை பொருட்களுடன் பயணம் செய்த இரண்டு பேரை டர்ஹம் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஐந்து கிலோ கிரர்ம எடையுடைய கிரிஸ்டல் மெத் எனப்படுகின்ற போதைப் பொருள் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மது போதையில் வாகனம் செலுத்துவோரை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
31 வயதான டெரன் சிமென்ஸ் மற்றும் 34 வயதான அடம் பெர்சுட் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.