வான்கூவரில் இரட்டை கொலை் ; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கனடாவின் வான்கூவர் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான்னெஸ் அவென்யூ – ஸ்பென்சர் தெரு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தி கொலை இடம்பெற்றதாக தகவல் கிடைத்தது என வான்கூவர் காவல்துறை தெரிவித்துள்ளது.
அங்கு சென்ற பொலிசார், வீட்டிற்குள் இருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் இருவர் கடுமையான காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
“இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று பொலிசார் உறுதியளித்துள்ளனர்.
மேலும் தகவல்கள் விசாரணையின் போது வெளிவரும் எனவும், சம்பவம் குறித்து தகவல் உடையவர்கள் 604-717-2500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.