அல்பர்ட்டாவில் அம்பியூலன்ஸ்-கார் விபத்தில் இருவர் பலி
அல்பர்ட்டாவில் அம்பியூலன்ஸ் மற்றும் கார் என்பன மோதிக்கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அல்பர்ட்டாவின் தோர்ஸ்பேயின் 39ம் இலக்க நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மருத்துவ உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காரை செலுத்திய 27 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய 51 வயதான பெண் மருத்துவ உதவியாளரும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றுமொரு மருத்துவ உதவியாளர் படுகாமயடைந்து எட்மோன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இடம்பெற்ற போது நோயாளிகள் எவரும் அம்பியூலன்ஸில் அழைத்துச் செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜேசன் கோபிங் தனது ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கூடிய சீக்கிரம் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.