அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை
அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கனடாவின் எட்மோன்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்மோன்டனின் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி ஒன்றில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும் எட்மோன்டனைச் சேர்ந்த 33 வயதான ஒருவரும் உயிர் இழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சிலர் பயணித்த போது எதிரில் வந்த வாகனத்தில் குழுவாக மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் காரணமாக குறித்த பாதையின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் ஒரு குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        