கனடா தயாரிப்பு என போலி முத்திரை: பல்பொருள் அங்காடிகளுக்கு அபராதம்!
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிக்க விரும்பும் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செயல்பட்டதற்காக, பிரபல நிறுவனமொன்றுக்கு சொந்தமான இரண்டு பெரிய கடைகளுக்கு கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.
கனடியர்கள் தற்போது பொருட்கள் வாங்கும் போது 'மேப்பிள் இலை' (Maple Leaf) குறியீடு உள்ள உள்நாட்டுத் தயாரிப்புகளையே அதிகம் தேடுகின்றனர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, வெளிநாட்டுத் தயாரிப்புகளை "கனடா தயாரிப்பு" எனத் தவறாகச் சித்தரித்ததற்காக: எட்டோபிகோக் பகுதியில் உள்ள இந்தக் கிளையில் சீஸ் (Cheese) வகைகளுக்குத் தவறான லேபிள் பயன்படுத்தப்பட்டது.

டொராண்டோவில் உள்ள இந்தக் கிளையில் ஒரு வகை காய்கறி கலவைக்கு (Broccoli slaw) தவறான விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த இரண்டு கடைகளுக்கும் தலா 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் முதல் தற்போது வரை இதுபோன்று தவறாகச் சித்தரித்த 5 கடைகளுக்கு மொத்தம் 47,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எங்கள் கடைகளில் ஆயிரக்கணக்கான பொருட்கள் உள்ளன. இருப்புக்கள் மாறும் போது, சில நேரங்களில் விளம்பரப் பலகைகளை உடனுக்குடன் மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது.
இது திட்டமிட்ட ஏமாற்று வேலை அல்ல, ஒரு நிர்வாகத் தவறு என குறித்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், நிபுணர்கள் இதை வெறும் எச்சரிக்கைஎன்று கருதுகின்றனர். ஆனால், இது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு (Reputation) பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.
கடைகளில் பொருட்கள் தவறாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால், அது குறித்து கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.