சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கொந்தளிப்பு
தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசுக்குச் சொந்தமான மீன்பிடி வளத் திணைக்களத்தின் (BFAR) 'பி.ஆர்.பி தாது மகத் சலமத்' (BRP Datu Magat Salamat) கப்பல் மீது சீனக் கடலோரக் காவல் படை கப்பல் மோதிப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பளவான் (Palawan) மாகாணக் கடற்பரப்பில் கடற்றொளிலாலர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கச் சென்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் பாதையில் சீனக் கப்பல் அபாயகரமாகக் குறுக்கிட்டு மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.பிலிப்பைன்ஸ் கப்பலே எச்சரிக்கைகளைப் புறக்கணித்துத் தன்னிச்சையாக வேகத்தை அதிகரித்து மோதியதாகச் சீனா இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிக்குச் சீனா உரிமை கோரி வரும் நிலையில், அந்த பகுதியில் அடிக்கடி இத்தகைய மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதுடன், சீனாவின் உரிமைகோரலுக்கு எவ்வித சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என ஐ.நா ஆதரவு பெற்ற நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது